இந்தியாவில் எலான் மஸ்கின்ஸ்டார்லிங் டிஷ்பொருத்தினால் கிராமத்திலும் ஹை ஸ்பீடுஇண்டெர்நெட்
2 நாள் பயணமாக எலான் மஸ்க் இந்தியா வருகை தர உள்ளார். எலான் மஸ்கின் இந்த பயணத்தின் போது இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சி இ ஓவுமான எலான் மஸ்க், இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டு,எலான் மஸ்கே இந்த தகவலை உறுதி செய்தார். எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்திய பயணம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், எலான் மஸ்க்கின் கனவு திட்டமான் செயற்கை கோள் மூலமக இணைய இணைப்பு அளிக்கும் ஸ்டார்லிங் இந்தியாவில் கிடைக்க இருப்பது பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில்ஸ்டார்லிங்: ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்தியாவிலும் ஸ்டார்லிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஸ்டார்லிங் என்பது பல ஆயிரக்கணக்கான செயற்கைகோள்களை உள்ளடக்கியது ஆகும். பூமிக்கு மிக நெருக்கமான கீழ் வட்டப்பாதையில் இது சுற்றி வருகிறது. அதாவது, பூமியில் இருந்து வெறும் 550 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
மற்ற புவிநிலை செயற்கைக் கோள்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் தாழ்வானது ஆகும். பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் இந்த ஸ்டார்லிங் செயற்கை கோள் மூலமாக அதிவேக இணைய இணைப்பை வழங்க முடிகிறது. நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஸ்டார்லிங் அல்லது வேறு ஏதாவது, நிறுவனமாக இருந்தாலும்.. இங்கிருந்து சிக்னல்களை அனுப்பும்.. இந்த சிக்னல்கள் நீங்கள் பொருத்தியிருக்கும் ஆண்டனாவிற்கு கிடக்கும். இந்த சிக்னல்கள் அங்கிருந்து உங்கள் வீட்டில் வைத்து இருக்கும் மோடம்-க்கு அனுப்படும். அதன் மூலம் உங்களுக்கு இணைய சேவை கிடைக்கும்.
0
Leave a Reply